அன்புமணி தேவையற்ற இலவசங்களை ஏன் எதிர்க்கிறார்..? தெளிவாக விளக்கும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சராக வேண்டுமென்ற ஆசை தனக்கு இல்லை என்றும், வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவிகள் மத்தியில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், தான் ஒருவேளை தமிழகத்தின் முதல் அமைச்சரானால் ஒரு குண்டூசியை கூட மக்களுக்கு இலவசமாக கொடுக்கமாட்டேன் என தெரிவித்தார்.

அதற்கு பதிலாக கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை இலவசமாக கொடுப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி மது குடிப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த தேர்தல் பற்றி யோசிக்காமல் அடுத்த தலைமுறை பற்றி யோசிக்கும் தலைவராக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் எனக் கூறிய அன்புமணி, தமிழக முதலமைச்சராகும் ஆசை தனக்கு இல்லை என்றார். மேலும், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இலவசம் குறித்தும், இலவச பொருட்கள் குறித்தும் பல்வேறு விதமான சர்ச்சையான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் வேளையில், எதனால் அன்புமணி ஆடம்பரமான இலவசத்தை வேண்டாம் என்று சொல்கிறார்..? என்கிற கேள்வியுடன் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்தாவது மக்கள் திருந்த வேண்டும். இவ்வளவு காலம் தாங்கள் எப்படி ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணரவேண்டும் என்ற நோக்கில் இலவச பொருட்கள் குறித்த சில அதிர்ச்சி தகவல்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

கீழே உள்ள இணைப்பில் அந்த வீடியோவை காணலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why anbumani oppose freebies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->