மக்கள்நலக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு வைகோவே காரணம்… தேமுதிக குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


வைகோவின் செயல்பாடுகள் காரணமாகவே மக்கள்நலக்கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் வீழ்ச்சியை சந்தித்ததாக தேமுதிக மகளிர் அணி தலைவியும் விஜய்காந்தின் மனைவியுமான பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள்நலக்கூட்டணி என்ற பெயரில் மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. மூன்றாவது அணி என்ற பெயரில் கணிசமான தொகுதிகளை கைபற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கியவர்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வெறும் ஐந்து சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கி பெரும் பின்னடைவை சந்தித்தது மக்கள்நலக்கூட்டணி. இந்நிலையில் கடந்த தேர்தலில் இந்த கூட்டணி வீழ்ச்சியடைந்ததற்கு வைகோவின் செயல்பாடுகளே காரணம் என பிரேமலதா விஜய்காந்த் குற்றம்சாட்டியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viko is reason of election defeat DMDK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->