டெல்லியில், நாளை எழுதப்படும் முடிவுரை! தப்பிப்பார்களா ஓபிஎஸ், இபிஎஸ்! காத்திருக்கும் தினகரன்! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தங்களது கட்சியின் சின்னமாக குக்கர் சின்னத்தை நிரந்தர சின்னமாக அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணையில் பதிவு செய்யபடாத ஒரு கட்சிக்கோ அமைப்புக்கோ நிரந்தர சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்க, குக்கர் சின்னத்தினை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

தன்னுடைய இறுதி தீர்ப்பில், குக்கர் சின்னத்தை தற்போதைய சூழ்நிலையில் நிரந்தரமாக ஒதுக்க முடியாது  எனவும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் இரட்டை இலை வழக்கில் 4 வரங்களுக்குள் தீர்ப்பு வரவில்லை என்றால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி அறிவித்து இருந்தது. 

இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பான தினகரன் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் நாளை இறுதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்குகிறது. 

இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், நாளை தீர்ப்பு வர இருப்பதால் தமிழக அரசியலில் புதிய பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இரட்டை இலையை தினகரன் கைப்பற்றுவாரா? அல்லது ஓபிஎஸ் இபிஎஸ் தக்கவைப்பார்களா என நாளை காலையில் தெரிந்துவிடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two leaves symbol case final judgement in delhi high court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->