2ஜி வழக்கின் காலக்கெடு இன்றே நிறைவு!! நாளை இறுதி தீர்ப்பு.? பதறும் திமுக வட்டாரம்!! - Seithipunal
Seithipunal


கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டர் மீது தனியார் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததால் அரசுக்கு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி வரை இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீண்ட வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கொரோனா காரணமாக மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு 2ஜி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் இறுதிவரை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், எதிர் மனுதாரர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதால் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கக் கூடாது என எதிர் மனுதாரர் வாதிட்டதால் இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்க முடியும் என கூறிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 2ஜி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதிக்குள் (இன்று) அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நாளை நடைபெறும் இந்த வழக்கின் விசாரணையின் போது 2ஜி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்படுமா? அல்லது தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே நாளை நடைபெறும் சரணின் போது இந்த கேள்விக்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவங்களும் சில மாதங்களில் உள்ளங்களில் 2ஜி வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பது திமுக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today last day to file affidavits in 2G case against Kanimozhi ARasa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->