ஆரம்ப சகுனமே சரியில்லை......கேலிக்கூத்தாக இருக்கும் கமலின் கட்டிப்பிடி வைத்தியம்! - Seithipunal
Seithipunal


புதியதாக அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நடிகர் கமலஹாசனுக்கு ஆரம்பமே சகுனம் சரியில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: புதியதாக அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு தொடக்கமே சரியில்லை என்றும் கட்சி நடத்துபவர்களிடம் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்காக நடிகர் கமலஹாசன் நடத்தும் கட்டிப்பிடி வைத்தியம் கேலிக்கூத்தாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் கமலின் இத்தகைய கட்டிப்பிடி வைத்தியங்கள் விஸ்வரூபம் எடுக்காது என்றும் எத்தனை கமல் வந்தாலும் அ.தி.மு.கவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் கூறினார்.

தன்னுடைய வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது என்றும் ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்ற காரணத்தினால் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The early sigh is not right for Kamal Hassan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->