என் நிறம் கருப்பு தான்., இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கு அஞ்சாது!! தமிழிசையின் அதிரடி பேச்சு!!  - Seithipunal
Seithipunal


இன்று தூத்துக்குடி சிவன் கோவில் அருகே பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் தூத்துக்குடி பகுதி மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும், வளர்ச்சியடைய வேண்டும். தூத்துக்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.

இந்திய வரைபடத்தில் வளர்ச்சி மிகுந்த நாடாளுமன்றம் என்ற பெயரை தூத்துக்குடி பெற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இங்கு போட்டியிடுகிறோம். நான் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்து இருப்பது தென் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தான். யாரெல்லாம் நம்மை இங்கு எதிர்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

தூத்துக்குடியை ஊழல்இல்லாத இடமாக மாற்ற வேண்டும். ஊழல் கறைபடிந்த அவர்களை தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நேர்மையான வேட்பாளரை தான் தூத்துக்குடி மக்கள் விரும்புவார்கள். நான் இந்த மண்ணின் மகள் எதிரணியில் உள்ளவரை போல் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல.

என்னை இறக்குமதி செய்யப்பட்டவர் என கூறினால் அது பொய். அவர் தான் இறக்குமதி செய்யப்பட்டவர். நான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரி. உங்களில் ஒருத்தி. சமூக வலைதளங்களில் என்னை எவ்வளவோ கேலியும் கிண்டலும் செய்து என் நிறம் கருப்பு என கூறுகிறார்கள்.

இந்த செம்மன் காட்டு பணங்காட்டு நிறம் கருப்பு எனவே இந்த பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கு அஞ்சாது. என் மீது எந்த குற்ற வழக்குகளும் கிடையாது. மோடி அவர்கள்,  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டு மக்களிடம் பேசும்போது, " ஒரு தலைவர் இருந்தால் என்னை பாராட்டு இருப்பார் .அவர் குஜராத்தை சேர்ந்த தலைவர் அல்ல தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜ்: என்று கூறினார்.

ஆனால், அந்த காமராஜரையே இழிவு படுத்தியவர்கள் தான் உங்கள் முன்னால் உங்கள் ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்பது உங்களுக்கு நன்றாக புரிய வேண்டும். நான் எதிரணிக்கு சொல்லிக் கொள்கிறேன்.

மத்திய மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற முடியும் என்றால், அது அதிமுகவும்-பாஜகவும் தான். திமுக காங்கிரஸ் நிச்சயம் முடியாது. ரத்தக்கரை படிந்த உங்கள் கரங்களோடு வாக்கு கேட்டு வராதீர்கள். 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இதே திமுக காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. இவர்கள் தடுத்து நிறுத்தவில்லை. மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் நாட்டு மக்களுக்கு நல்லது கிடைக்கும்.

நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறேன் எனது அரசியல் வாழ்க்கை மிகவும் கரடு முரடானது. அந்த பாதையில் நடந்து தான் நான் உங்களை வந்து சேர்ந்து உள்ளேன் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் பலத்தோடு தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்" என அவர் உஙற்சி பொங்க கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai speech in thuthukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->