சமூக வலைத்தளங்களில் கேளிக்கைகள் வந்தாலும் மதுரையை சிட்னியாக மாற்றாமல் விடமாட்டேன்.!! செல்லூர் ராஜு ஆவேசம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள மதுரை நகரை சிட்னி நகரை போல விரைவில் மாற்றம் அடைய செய்வோம் என்று அதிமுகவின் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்திருந்தார்., அதன் படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் சிறப்புரை ஆற்றினார். 

அந்த உரையில்., மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மதுரை மாநகரை சர்வதேச நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

அனைத்து மக்களும் நலமோடும் வளமோடும் வாழுவதற்கான வசதிகளை சிறப்பான முறையில் செய்து வருகிறார்., அந்த வகையில் மதுரை மாநகரை சிட்னி நகரை போல மாற்றம் அடைய செய்வேன் என்று கூறினேன்., இதனை பலர் ஏளனம் பேசினாலும்., சமூக வலைத்தளங்களில் கேளிக்கை கருத்துக்களை தெரிவித்தாலும் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கான அடிக்கல் நாட்டு விழாவை துவங்கியுள்ளோம். 

அந்த வகையில்., மதுரையில் இருக்கும் பெரியார் பேருந்து நிலையம்., மீனாட்சி அம்மன் கோவில்., நாயக்கர் மஹால் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்பட்டு மதுரை மாநகரானது நவீனமயமாக்கப்படும். இந்த திட்டமானது இன்னும் 18 மாதங்களில் நிறைவு பெற்று., அதற்கு பின்னர் மதுரை மாநகரம் சிட்னி நகரை போலவே மாற்றமடையும். இதனை மக்கள் எண்ணி பார்த்து அதிமுக அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju speech about Madurai smart city to convert Sidney


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->