ராஜஸ்தான் முதல்வராகிறாரா சச்சின் பைலட் - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ்.  இந்த மூன்று மாநிலங்களிலும் முதல்வரைத் தேர்ந்த்டுக்க மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இடையே நடைபெற்றக் கூடத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசந்துரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இங்கு முதல்வர் பதவிக்கு ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்டுக்கும், மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கேலாட்டுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் கட்சித் தலைமையை சந்திக்க வருமாறு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் டெல்லி விரைந்துள்ளனர்.

இன்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்கும் இருவரும் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை பற்றி விவாதிப்பார். இந்த விவாதத்திற்கு பிறகு ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்ற முடிவு வெளியாகும் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சச்சின் பைலட் முதல்வர் ஆக அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin Pilot likely to be Rajasthan CM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->