விஜய்க்கு ஆதரவாக கைகோர்க்கும் அரசியல் தலைகள், வாயை கொடுத்து வாங்கி கட்டிகொண்ட பா.ஜ.க..!! நினைத்தாலும் தப்ப முடியாத சிக்கல்.. - Seithipunal
Seithipunal


மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக, அந்த குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என மிரட்டி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோரும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்

பங்கேற்ற பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா மெர்சல் திரைப்பட காட்சிகளை இணையதளத்தில் பார்த்ததாக பேசியிருந்தார்.

இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாக எச்.ராஜா பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. பைரசி எனப்படும் திருட்டுக்குற்றத்தை சட்டபூர்வமாக அரசுகள் ஆக்கிவிட்டதா?

என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  தற்போது தமிழ்நாட்டின் ஹாட் நியூஸ்இதுவாகவே உள்ளது

மேலும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.

எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி...

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , பாஜகவினால் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது மெர்சல் படம் விவகாரத்தில் உறுதியாகியுள்ளது என்றார்.

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வலையை நெறிக்கும் வேலையில் மத்திய அரசுஇறங்கியுள்ளது,

என்பது மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்றும் அவர் கடுமையாக சாடினார்.ஜிஎஸ்டியை நானும் தான் எதிர்க்கிறேன் என் மீதும் வழக்கு போடுவார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர்,

இணையதளங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், பாஜகவின் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, மெர்சல் திரைப்படத்தை இணைய தளத்தில் பார்த்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raja's interview about mersal movie and issues faced by him


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->