இது தான் ஜனநாயகமா? - பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தி வரும் சூழலில் அவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கேட்டால் அவர்களை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள் - இது தான் ஜனநாயகமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்கள் சொல்வதை கேட்க மறுக்கிறார்கள் - இது தான் ஜனநாயகமா? முன்னாள் ஆளுநர் உண்மையைச் சொன்னால், சிபிஐ வீட்டுக்கு அனுப்புகிறார்கள் - இது தான் ஜனநாயகமா? எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறார்கள் - இது தான் ஜனநாயகமா? பிரிவு 144, இணையத்தடை, கண்ணீர் புகை குண்டுகள் - இது தான் ஜனநாயகமா?

ஊடகங்கள், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு உண்மையின் ஒவ்வொரு குரலையும் ஒடுக்கிவிட்டார்கள் - இது தான் ஜனநாயகமா? மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi criticized BJP govt in farmers protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->