பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :

அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்.

ஓ. பன்னீர்செல்வம் :

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர் ராமதாஸ் :

தை பிறக்கட்டும், மகிழ்ச்சி பிறக்கட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

டிடிவி. தினகரன் :

உலகெங்குங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ :

கடந்து சென்ற ஆண்டு தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு அதிர்ச்சியும், அல்லலும், துன்பமும் தந்த ஆண்டாகியபோதும், இரவு நீண்டதாக இருந்தாலும், விடியல் உறுதி என்பதைக் கட்டியம் கூறி, கிழக்கு வெளுக்கின்றது; கீழ்வானம் சிவக்கின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று தமிழர் காலம் காலமாகக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கைக்கு அடையாளமாக இதோ பொங்கல் நாள் புத்துயிர்ப்புடன் புலர்கின்றது. இஞ்சியும், மஞ்சளும், செந்நெல்லும் கன்னலும் செழித்துக் கொழித்து இருக்கின்ற சூழலில், தமிழ்ப் பண்பாட்டின் மீட்டுருவாக்கத்திற்கு அடையாளமாக “பொங்கலோ பொங்கல்” என்கின்ற மங்கல முழக்கத்தில், உள்ளம் இன்ப வெள்ளத்தில் துள்ளுகின்றது,

கடும்பனி மறைந்து, கதிர் ஒளியின் வெளிச்சத்தில் புதுப்பானை உலை ஏற்றி, புத்துருக்கு நெய் விட்டு, புத்தரிசி உலையில் இட்டு, மங்கை நல்லாளோடும், மக்கட் செல்வங்களோடும் குதூகலித்துக் கொண்டாடும் இன்பத் திருநாள், நம் பண்புத் திருநாள் தை பொங்கல் என்பதால் தாய்த் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

திருநாவுக்கரசர் :

‘தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிற முதுமொழி.  தமிழ் மக்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட தை முதல் நாளை, தமிழர்கள் திருநாளாகக் கொண்டாடப்படுவது தமிழ் மக்களுக்கு பெரும் சிறப்பாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal wish in political leaders


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->