திடீர் திருப்பம்.! ஒரே அடியாக தேர்தல் புறக்கணிக்கப்படுகிறதா..? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் நகராட்சி பகுதிக்குட்பட்டது வண்டிமேடு, இப்பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

இப்பகுதியில் சர்வே.எண். 347, 350, 536 ஆகிய பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும் பங்கள் முறையாக பத்திரப் பதிவு, பட்டா உள்ளிட்ட ஆவணங்களோடு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பண்ருட்டி வக்பு வாரிய ஆய்வாளர் ஒருவர் கடந்த 2012இல் இந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தம் எனக் கூறி விழுப் புரம் பத்திரப்பதிவு இணை ஆணையரிடம் புகார் மனு கொடுத்து, அந்த இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை கோரியிருந்தார்.

அதனடிப்படையில் பத்திரப் பதிவுத் துறை தடை வழங்கி இருந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையான ஆவணங்களோடு கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து வட்டாட்சியர், நில அளவை உதவி இயக்குநர் ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்து மற்றும் நேரடி விசாரணை செய்து இந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி கடந்த 2013இல் சான்றிதழ் வழங்கினர்.

இந்த ஆவணங்களை வைத்து கடந்த 2013இல் பத்திரப் பதிவு தலைவர், வக்பு வாரியத் தலைவர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு இப்பகுதியில் வீடுகள் வாங்க விற்க பத்திரப்பதிவுத் துறையால் விதிக்கப் பட்டுள்ள தடையை ரத்து செய்யக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அனைத்து வீடுகளிலும் துண்டு பிரசுரங்களை ஒட்டி எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples boycott election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->