ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தேர்தலா..? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது.

அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.

 பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் பாஜக மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பலமான ஒரு கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகிறது.

இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரவ் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் பேசிக்குவார்த்தை நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், மிசோராம், மாத்திரை பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களை கை பிடித்தது.

அடுத்து எந்த கட்சி இந்தியாவில் ஆட்சிக்கு வரும் என்ற பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில்,சமூக வலைத்தளங்களில் தேர்தல் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்று தெரிய வந்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்த வாட்ஸ்ஆப்  தகவலில், அதில் ஏப்ரல் மாதம் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளதாகவும், மொத்தம் பத்து கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் முடிவடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தேதியும் அந்த வதந்தியில் உள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் வதந்தி பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இது தெரியாமல் தொடர்ச்சியாக குறித்த வாட்ஸ்ஆப் தகவலை பகிர்ந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliamentary-election fake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->