முதல் சந்தேகமே ஓ.பி.எஸ் மீது தான் - ஒரே நேரத்தில் இருவர் கைதாக வாய்ப்பு..? அமமுக வெளியிட்ட திடுக்கிடும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை நடத்தும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக தயக்கம் காட்டுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் மனக்குழப்பத்தில் இருப்பதால் தான் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏகலை திரும்பி வாருங்கள் என்று அழைத்து வருகிறார்.

11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கு விரைவில் முடிய இருப்பதால் தான் மனம் திருந்தி வாருங்கள் என்று கெஞ்சி வருகிறார். அந்த வழக்கில் பன்னீர்செல்வம் பதவியை இழந்தே ஆகவேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள 21 தொகு

https://img.seithipunal.com/large/large_eps-ops-2450.jpgதியில் இடைத்தேர்தலையும் நடத்த தயார் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அவ்வாறு தேர்தல் அறிவித்தால் அ.தி.மு.க-விற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. இரட்டை இலை வழக்கை 4 வாரத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஒருவேளை தேர்தல் அறிவிப்பு வெளியானால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதியாக இருக்கும். பா.ஜ.கவிடம் அடிமையாக இருப்பதால், வரும் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கூட பா.ஜ.கதான் அறிவிக்கும் நிலை உள்ளது.

பல்வேறு ஊழல்களை செய்துள்ள ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சிறைக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது.

 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது, ஓ.பி.எஸ் தினமும் தவறாமல் வந்து காத்திருப்பார். அனைத்து விஷயங்களும் தெரிந்த காரணத்தால் தான் ஓ.பி.எஸ், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக தயங்குகிறார்.

எங்களுக்கு முதல் சந்தேகமே ஓ.பி.எஸ் மீது தான் ' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Not united during function, OPS side unhappy with EPS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->