அதிமுக உருவானதே குடும்ப அரசியலை ஒழிக்க தான்..!! அதிமுக எம்.பி தம்பிதுரையின் பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த ஓசூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சபாநாயகரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய கோஷமாக இருக்கும். 

அதிமுக என்ற கட்சி உருவாக காரணமே குடும்ப அரசியலை ஒழிப்பதற்காக தான். இந்தியாவில் ஒரே குடும்பத்தில் இருந்து முதலமைச்சராகுவது எங்காவது நடந்திருக்கிறதா..?? நேரு குடும்பத்தில் கூட இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. முதலமைச்சருக்கு சமமான பதவிகளில் ஒரே குடும்பத்திலிருந்து ஐந்து ஆறு பேர் தொடர்ந்து கோலோச்சி ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இதனை அடியோடு ஒழிக்க வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Thambidurai said AIADMK was formed to eliminate family politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->