ஒரே அரசாணை தான், இது வெளியே வந்தால் அனைத்தும் அவுட்..? அங்கு அவங்க நூதன போராட்டம் செய்த நேரத்தில், இவர் செய்த வேலைய பார்த்தீங்களா? - Seithipunal
Seithipunal


விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை பொதுப்போக்குவரத்து பட்டியலில் இணைக்க மோடி அரசு முயற்சித்து வருகிறது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார்  கூறியுள்ளார்

மோட்டார் வாகன சட்டத்தில் செய்ய உள்ள பல்வேறு திருத்தங்கள் மூலம் மோட்டார் தொழிலை கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆட்டோ, சிறிய சரக்கு வாகனங்கள், வாடகை கார்கள், கால் டாக்சிகள், அரசு போக்குவரத்து ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமின்றி லாரி, பஸ் உரிமையாளர்கள், ஒர்க் ஷாப் உரிமையாளர்கள், உதிரி பாக உற்பத்தியாளர்கள்,

ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிறுவனங்கள் ஆகிய மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

சட்டத் திருத்தம் அமல்படுத்துவதற்கு முன்பாக அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து தற்போதைய நடைமுறையை மாற்றி வருகிறது. இப்போது பாஜக அரசின் கார்ப்பரேட் பசிக்கு டிராக்டர்களும் தப்பவில்லை.

பஸ், லாரி, டாக்சி, வேன் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு வருடம் ஒரு முறை தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

வண்டிகளை முற்றிலும் புதுப்பித்துத் தான் தகுதி சான்றிதழ் பெற வேண் டும். சிறிய வாகனமான ஆட்டோவிற்கு கூட வருடம் ஒரு முறை ரூ.10,000 வரை செலவு ஏற்படும்.

இந்தப் பணிகள் இப்போது சாலை ஓரங்களில் உள்ள ஒர்க் ஷாப்புகளில் நடைபெற்று வருகிறது.

சில ஆயிரங்களில் முடியும் இந்த பணிகளை பல ஆயிரம் செலவு செய்து வாகன உற்பத்தியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சர்வீஸ் ஸ்டேசனில் தான் வேலை பார்க்க வேண்டும் என சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது.

இதை எல்லாம் எதிர்த்து தான் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.தற்போது விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர் பொதுப் போக்குவரத்து வாகனம் என்ற பட்டியலில் இல்லை.

டிராக்டர்கள் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்த பின்பு 1974ஆம் ஆண்டு பொதுப் போக்குவரத்து என்ற பட்டியலில் இப்போது டிராக்டர் எடுக்கப்பட்டு விட்டது.

ஆனால் இப்போது மோடி அரசு டிராக்டர்கள் பொதுப் போக்குவரத்து பட்டியலில் சேர்க்க கருத்து கேட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு சேர்க்கப்பட்டால் வருடா வருடம் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். சாதாரண சிறிய நடுத்தர விவாசயிகள் டிராக்டர் வைத்துக் கொள்ள முடியாது.

டிராக்டர் வாடகைக்கு எடுத்தாலும் கட்டுப்படியாகாது. சாதாரண விவசாயிகளுக்கு இனி டிராக்டர் என்பது கனவே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi's next idea for farmer in tracktor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->