வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டிய மோடி!! வைரலாகும் புகைப்படங்கள்!!  - Seithipunal
Seithipunal


இன்று காலை ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்கு வந்தார். விமான நிலையத்தில்அரசு உயரதிகாரிகள் மற்றும்  அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் ஆகியோர் பிரதமருக்கு மலர்கொத்துகளை அளித்து வரவேற்றுள்ளனர். 

பின்னர் லே விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான 480 கோடி ரூபாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து, 9 கிலோவாட் ஆற்றல் கொண்ட ஆற்றுநீர் மின்சார உற்பத்தி திட்டத்தை டட்டா கிராமத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், 220 கிலோவாட் திறன் கொண்ட மின் வழித்தடப் பாதையை  ஸ்ரீநகர்-டிராஸ்-கார்கில்-லே பகுதிகளுக்கு இடையில் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். லடாக் பல்கலைக்கழகத்தை, ஜன்ஸ்கர், லே, கார்கில், நுப்ரா, டிராஸ், கால்ட்சி போன்ற பகுதிகளில் உள்ள கல்லூரிகளை ஒருமுகப்படுத்தும் வகையில் மோடி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் லே யில் உரையாற்றிய மோடி, " லடாக் மற்றும் கார்கில் பகுதிக்கு கடந்த ஆண்டில், சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும், சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி 10 நாட்களில் இருந்து தற்போது 15 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும்,

பிலாஸ்பூர்-மனாலி-லே ரெயில் பாதை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டதும் டெல்லி-லே இடையே தூரம் குறைந்துவிடும். இதனால், சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என்றும், இதன் மூலம் லடாக் பகுதியின் இயற்கை அழகை அவர்கள் அதிகமாக கண்டு மகிழலாம் என்றும் முடி கூறியுள்ளார். 

அங்குள்ள பனியின் காரணமாக மோடி அணிந்திருந்த உடைகள் மிகவும் வித்தியாசமான தோற்றத்தை மக்களுக்கு அளித்துள்ளது. அங்கு அவர் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி தற்பொழுது மோடியின் உருவத்தை பற்றி விமர்சித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi in ladkha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->