நமக்கு கிடைத்த வரம்.! விவசாய குடும்பத்தில் பிறந்த முதல்வருக்கு தெரியும்., மக்களின் பிரச்சனைகள் என்னவென்று.! அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள மதுரை நகரை சிட்னி நகரை போல விரைவில் மாற்றம் அடைய செய்வோம் என்று அதிமுகவின் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்திருந்தார்., அதன் படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் சிறப்புரை ஆற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி உதயகுமார்., மக்களின் உரிமையை பாதுகாப்பதில் பாதுகாவலராக இருந்து செயல்பட்டு வரும் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி., மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார். 

நமது முதல்வர் விவசாய குடும்பத்தில் இருந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தவர் என்பதால்., அவருக்கு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள் தெரிந்து., அவர்களுக்கு தேவையான பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

முதலைச்சரும்., துணை முதலமைச்சருக்கு சேர்ந்து இருகுழல் துப்பாகியை போலவே இருந்து தமிழகத்தின் பொன்னான ஆட்சியை சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றனர். மதுரை மாநகரை தனது தாய் மண் போலவே நேசிக்கும் துணை முதல்வர்., பல்வேறு நல திட்டங்களை மக்களுக்காக முனைப்புடன் அறிமுகம் செய்து வருகிறார். 

பிரதமர் மோடி அவர்கள் வரும் 27 ம் தேதியன்று நீண்ட கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு வருகிறார்., இந்த மருத்துவமனை நமக்கு கிடைத்த வரமாகும்., மதுரையின் வளர்ச்சியானது நாளுக்குள் நாள் தொடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister rp udayakumar speech about smart city and aims hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->