கர்நாடகத்தில் இன்னும் ஆட்சி அமையாத நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை என கூறிய பதிவியேற்கப்போகும் முதல்வர்!. - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாக இருந்தது.காங்கிரஸ் மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு போதுமான அளவுக்கு அதிகமாக இருந்தது. இதனால் இந்த இரு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில்  தனது முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ள நிலையில், குமாராசாமிக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை புதன்கிழமை குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

 அவரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுக்கு குமாரசாமி தரப்பிலிருந்து அழைப்பு விடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கர்நாடகத்தில் பதவி ஏற்கவுள்ள புதிய அரசு தான் செயல்படுத்த வேண்டும். அது அந்த அரசின் கட்டாய கடமை என்று கூறினார். மேலும் கர்நாடகத்தில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு என்பது காவிரி மேலாண்மை ஆணையத்திடம்தான் இருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு கர்நாடகத்திடம் இருப்பது நல்லதல்ல என கூறினார்.

ரஜினியின் பேட்டிக்குறித்து கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்கவுள்ள  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறுகையில், கர்நாடகா அணைகளில் உள்ள நீர் இருப்பு கர்நாடகாவுக்கே போதாத நிலையில் உள்ளது. எனவே, கர்நாடகா அணைகளில் உள்ள நீர் நிலவரத்தைப் பார்வையிட வருமாறு ரஜினிகாந்த்தை அழைத்துள்ளேன். இதனால், கர்நாடக அணைகளின் நீர் நிலைமை பற்றி ரஜினிகாந்த் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன் என கூறினார்.

கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி, அம்மாநிலத்தின் அணைகளில் உள்ள நீர்மட்டத்தைப் பார்க்க வருமாறு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ள விஷயம் மேலும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நியாயம் கிடைக்காது என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumaraswami called on actor Rajini to come to see the water in the dam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->