கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது திருமண நாள் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்! - Seithipunal
Seithipunal


கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் திருமண நாளில் தனது மனைவி கமலாவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இன்று கேரளத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியுடன்‌ கொச்சியில் நடைபெற்ற விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.   

மேலும், கடற்படைக்கான புதிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நேற்று முதலே கேரளாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று, நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் முன்னிருந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இன்று தனது திருமண நாளை மறக்கவில்லை. கேரளத்தில் பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதும், பினராயி விஜயன் கொச்சியிலிருந்து திருவனந்தபுரம் திரும்பியுள்ளார்.  

மேலும், பினராயி விஜயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது மனைவி கமலாவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன், தனது திருமண நாளில், புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala cm share his marriage pic


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->