கர்நாடகாவில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி! ஒதுக்கப்பட்ட தொகுதிகள்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த காங்கிரஸ்!!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து, 2019 மக்களவை தேர்தல் தேதி மற்றும் தேர்தல் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 1
2-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18
3-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 23 
4-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 29 
5-வது கட்ட தேர்தல் -  மே 6 
6-வது கட்ட தேர்தல் - மே 12 
7-வது கட்ட தேர்தல் - மே 19 
வாக்கு எண்ணிக்கை - மே 23

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 18, 23 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பல்வேறு கட்சிகளும் அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே இன்று கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமானது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka congress 20 volumes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->