சோகத்தில் மூழ்கிய திமுகவினர் - திமுக மூத்த நிர்வாகி உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர் க. அன்பழகன் வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். 97 வயதான அன்பழகன் அவ்வப்போது உடல்நிலை உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்.

இதன் காரணமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வருகிறார்.இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

கலைஞரை இழந்து சோகத்தில் இருந்தே மீளாத திமுகவினர் பொதுச்செயலாளர் உடல்நலமின்மையை எண்ணி சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகனை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  பேராசிரியர் இரண்டொரு நாளில் வீடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.

அதிக அளவு சளி பிடித்துள்ளதாகவும் அதற்காகவே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

தற்போது சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குழாய் மூலம் சளி வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k anbazhagan hospitalized mk stalin dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->