அதிமுகவா? திமுகவா? பரபரப்பு கிளப்பிய முக்கிய புள்ளி.! அதிர்ச்சியில் ஓபிஎஸ் - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அமைக்கப்பட்ட அதன் செய்தி தொடர்பாக பெங்களூரு புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள செயிண்ட் ஜான் பாஸ்கோ பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் நாட்டை துண்டாக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற திராவிட இயக்க தலைவர்களின் படியில் மதசார்பற்ற ஜனநாயகத்தை எப்போதும் போல் தழைக்கச் செய்ய இன்று வாக்கு செலுத்தி உள்ளேன்" என தெரிவித்துள்ளார். 

பெங்களூரு புகழேந்தியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தியில் இருப்பதால் பெங்களூரு புகழ்ந்து இவ்வாறு பேசியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

மேலும் அவர் ஓபிஎஸ் அணையில் இருந்து விலகி அதிமுக அல்லது திமுகவில் இணையலாம் என பரவலாக பேசப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பெங்களூரு புகழேந்தி திராவிட சித்தாந்தத்தை கொண்ட நான் எங்கள் தலைவர்கள் குறித்து பேசியதை பாஜகவுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளனர் என விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info ops team pugazhenthi joining in DMK ore aiadmk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->