உளுந்தூர்பேட்டை போராட்டம்:267 பேர் மட்டும் விடுதலை.!வேல்முருகன் மீது வழக்கு பதிவா.!? - Seithipunal
Seithipunal


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி  சுங்கசாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

tvk toll plaza protest க்கான பட முடிவு
உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி  சுங்கச்சாவடியில் போரட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீரென சுங்க சாவடியை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது. 

போராட்டத்தின் போது சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்  வேல்முருகனை கைது செய்தது போலீஸ். கைதானவர்கள் மீது காவல்துறை 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. 

Image result for tvk in cellphone tower protest

இதனையறிந்த தவாக கட்சி தொண்டர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வேல்முருகனை விடுதலை செய்ய போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் விரைந்து வந்து சமாதானம் செய்ய முயற்சிசெய்தனர்.ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இதனை  அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 11 பேரின் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தனர்.அதன் படி வேல்முருகன் உட்பட 267 பேரை விடுதலை செய்வதாக அறிவித்ததால் அவர்கள் கோபுரத்திலிருந்து இறங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ulunthurpetai case 267 protesrers are released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->