மோடி மீண்டும் பிரதமராக, அதிரடி கோரிக்கைகளுடன் 31 நாட்கள் கூலி தொழிலாளி செய்யும் காரியம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் குருவராஜப்பேட்டையில் வசித்து வருபவர் குருவை பூபாலன். 48 வயது நிறைந்த இவர் கூலி தொழில் செய்து வருகிறார்.

 இவர் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும், அவரது ஆட்சி தொடர வேண்டும் என்று கடந்த  4-ந் தேதி முதல் மார்ச் மாதம் 6-ந் தேதி வரை தொடர்ந்து 31 நாட்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முடிவுசெய்து அதனை மேற்கொண்டு வருகிறார்.
 
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், மோடி பிரதமராக பதவியேற்ற பின்  மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு  வருகிறது. 

அதனால் அவர் மீண்டும் பிரதமராகி அவரது நல்லாட்சி தொடர வேண்டி கடந்த 4-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரார்த்தனை செய்து வருகிறேன். வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி வரை தொடர்ந்து 31 நாட்கள் கிரிவலம் செல்ல உள்ளேன்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவும், திருவாசகம் சிவபுராணம், திருப்பள்ளி எழுச்சி போன்றவை 18 ஆட்சிமொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் எனவும்,  இயற்கை விவசாயம் செய்பவருக்கு இந்த அரசு  ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிரிவலம் செல்கிறேன்

மேலும் இதனைபோல இதற்கு முன்னர்  மத்தூர் மகிஷாசூரமர்த்தினி கோவிலில் இருந்து திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடைபயணமாக சென்று  பிரார்த்தனை செய்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmer went girivalam for modi became pm again


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->