இந்தியாவின் தலைமகன் டாக்டர் அம்பேத்கர்.!! - இபிஎஸ் புகழாரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளை உருவாக்கி நாட்டின் முதல் சட்ட அமைச்சராக திறம்பட பணியாற்றி அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "இந்திய ஜனநாயக குடியரசின் அடிப்படையான அரசியலமைப்பு சாசனத்தில் தந்தை, 

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை தலைநிமிரச் செய்த இந்தியாவின் தலைமகன், அடிப்படை வாத சக்திகளை கலங்கடித்த கலகக்குரல், சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க பாடுபட்ட புரட்சியாளர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் அமைந்துள்ள அவர் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்" என தனது எஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS praised Dr ambedkar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->