இதுதான் என் கடமை.. இவர்கள்தான் நம்முடைய முதல் எதிரி.. அனல் பறந்து ஈபிஎஸ்-ன் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிருவன தலைவருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சையில் 70 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "இரு பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த இந்த இயக்கத்தை மென்மேலும் வளர்க்க வேண்டும். அதுதான் என்னுடைய கடமை.

அதற்காகத்தான் என்னிடத்தில் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். என்னை பொறுத்த வரைக்கும் யாரும் எதிரிகள் கிடையாது. ஆனால் இந்த இயக்கத்தை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் தான் முதல் எதிரி. 

எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கத்தை ஜெயலலிதா அவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து இயக்கத்தை வளர்த்தார்கள். 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊர் ஊராக  பிரச்சாரம் செய்து தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் ஆட்சியை அமைத்தார்.

ஆனால் அதிமுக ஆட்சியை தவிர்க்க வேண்டும் என சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டு போட்டார்கள். ஆனால் அவ்வாறு எதிர்த்து ஓட்டு போட்டவர்களுக்கும் கழகத்தின் உச்சபட்ச பதவி வழங்கப்பட்டது. இயக்கம் ஒற்றுமையாக நன்றாக இருக்க வேண்டும் என அவர்களையும் ஆதரித்தோம்.

அப்போதும் கூட நயவஞ்சக புத்தியோடு செயல்பட்டார்கள். எவ்வளவு பெரிய உயர்ந்த பதவி கொடுத்தாலும் அவர்கள் திருந்த படுவதாக இல்லை. ஆனால் ஆண்டவனாக பார்த்து வேட்டி கட்ட முடியாத கொடி கட்ட முடியாத நிலைக்கு தள்ளிவிட்டார். 

நம் இயக்கம் தெய்வத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம் தெய்வத்தின் அருளால் செயல்படுகின்ற இயக்கம். யாராலும் அழிக்க முடியாத, ஒடுக்க முடியாது முடக்கவும் முடியாது. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் அதிக உறுப்பினர்கள் உள்ள ஒரே கட்சி அதிமுக தான்" என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps criticized ops in thanjavur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->