கச்சத்தீவு விவகாரம்.. "10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?" - பாஜகவை தாக்கிய ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


கச்சத்தீவு விவகாரத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கொடிசியா மைதானத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கச்சத்தீவு விவகாரத்தில் அதிமுக தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர் "இன்றைக்கு தேர்தல் வந்துவிட்டவுடன் பத்தாண்டு காலம் கட்ச தீவு விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய பாஜக அரசு அதற்கான பதில் மனுவை கூட தாக்கல் செய்யவில்லை. 

உண்மையிலேயே மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால் பாஜக அரசு பதில் மனு போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு பதில் மனு தாக்கல் செய்யும்போது கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்வோம் என்பதை சேர்த்து போடுங்க. 

தானாக இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவு நீதிமன்றத்தின் மூலமாக திரும்ப பெற முடியும். ஆனால் அதை செய்யாமல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மீனவர்களின் வாக்குகள் இப்போது தேவை அதற்காக கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். மத்தியில் ஆட்சி செய்தவர்கள் பத்தாண்டு காலம் எங்கே போனார்கள்? 

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலம் ஆகிறது இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? என பஜகாவையும் திமுகவையும் கச்சத்தீவு விவகாரத்தில் கடுமையாக தாக்கி பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized BJP Narendra Modi in katchatheevu issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->