இ பி எஸ்- உடன் சேர்த்து, மத்திய அரசையும் கிழித்தெடுத்த, டிடிவி.தினகரன்!! அம்பலமான அரசின் திட்டம்!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம், 'எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுமுறை மக்களை சந்திக்க வரவில்லை. மக்கள் மிகவும் கொதிப்புடன் காணப்படுவதை அறிந்தே புயல் பாதித்த பகுதி மக்களை சந்திக்க முதலமைச்சர் வந்துள்ளார்.

இதனால் தான், தற்போது முதலமைச்சர் நாகை, திருவாரூர் ஆகிய பகுதியில் ஆய்வு மேற்கொள்வது மற்றும் மத்திய குழுவும், தமிழக அரசும் எடுத்துவரும் நடவடிக்கைகள்அனைத்தும் கண்துடைப்புதான். முன்னரே, மத்திய அரசு இதனை 'தேசிய பேரிடராக' அறிவித்து முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மத்திய குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து அவர்கள் நிவாரண தொகை அறிவிப்பதற்குள் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

தமிழக அரசு இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் கட்டாயமாக 8 இடங்களில் வெற்றி பெறவேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால் 'ஆட்சி போய் விடும்' என்ற பயத்தில் தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலுடன் வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தத் தேர்தலிலும் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை.மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் உள்ளனர்.  மேகதாதுவாக இருக்கட்டும், ஸ்டெர்லைட் ஆலையாக இருக்கட்டும் தமிழக அரசு மக்களுக்கு ஆதரவாக செயல்படாது.

வேதாந்தா நிறுவனத்திற்கு, மத்திய அரசு ஆதரவாக இருக்கும் பொழுது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் எப்படி அத்திட்டங்களை எதிர்ப்பார்? பல்வேறு வி‌ஷயங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மோடி, ஒருபொழுதும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும், கஜா புயல் தாக்கத்திற்கும் ட்விட்டரில் கூட எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை! ' என  அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps and central govt blamed by ttv dhinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->