தேர்தல் முடிஞ்சதும் பாருங்க... "சிலிண்டர் விலை ₹400 உயரும்".. எச்சரிக்கும் திமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 100 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாக குறைக்கும் எனக் குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி சமையல் எரிவாயுவை மிகவும் மலிவான விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழ்நிலை பூஜை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசின் இந்த விலை குறைப்பு குறித்து தனியார் செய்து ஊடகத்திற்கு பேட்டி அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி "இன்னும் பத்து நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பை மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. 

ஒரு சிலிண்டரின் விலை ரூ.450 ஆக இருந்ததை ரூ.1100 ஆக உயர்த்தியது மத்திய பாஜக அரசுதான். இப்போது தேர்தலுக்காக 100 ரூபாயை குறைத்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் 400 ரூபாய் வரை உயர்த்தி விடுவார்கள். எனவே மக்கள் மத்திய பாஜக அரசை புறக்கணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK criticized Central govt Gas cylinder price reduction


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->