திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.! முடிந்தது பங்கீடு.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.?!! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என்ற பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 

திமுக தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் வரும் 17 வது மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது.

அதேபோல், அதிமுக தலைமையில், பாஜக, பாமக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மேக கூட்டணி அமைந்துள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக, தமாக இணைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதில்,  பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் வழங்கி உள்ளது.

இதனை பெற்று கொண்ட திமுக, கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு வராத அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து, யாருக்கு எதனை தொகுதி என்ற விபரத்தை அந்தந்த கட்சிகளிடம் திமுக மேலிடம் தெரிவித்துள்ளதாகவும், இதனை யாருக்கும் தற்போது சொல்ல வேண்டாம் என்றும் திமுக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. 

இன்னும் ஒரு வாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முழு பட்டியலையும் அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்று அந்த கட்சியின் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

மேலும்,

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள்,

ம.தி.மு.க - 1 தொகுதிகள்,

விடுதலைச் சிறுத்தைகள்  - 1 தொகுதிகள்,

இந்திய கம்யூனிஸ்டு  - 1 தொகுதிகள்,

மனித நேய மக்கள் கட்சி  - 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK ALLIANCE


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->