எட்டு உயிர் போனதன் காரணம்? வேண்டி கேட்ட அமைச்சர், கேட்டும் பாரபட்சம் காட்டிய முதல்வர்..! வெளிச்சத்திற்கு கொண்டுவந்த டிடிவி.. - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாரில், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில் அப்பாவிகள் எட்டு பேர் இறந்துள்ளனர்..

அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பு, முற்றிலும் இல்லாத நிலையை இந்த விபத்தும், உயிர் பலியும் எடுத்துக்காட்டுகிறது என்பதை சுட்டிகாட்டியுள்ளார்..

மார்ச் மாதம், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னை மீட் செய்தார்..

அப்போது, போக்குவரத்து துறைக்கு, போதிய நிதியை முதல்வர் இபிஎஸ் ஒதுக்கவில்லை. முதல்வர் மற்றும் அவரை சார்ந்த ஒரு சில அமைச்சர்களின் துறைக்கு மட்டும் போதிய நிதி ஒதுக்கப்படுகிறது என குறை கூறினார்..

அவர் கூறிய குறை, தற்போது வரை நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது இந்த விபத்தில் இருந்தே நன்றாக தெரிய வருகிறது.

ஆட்சி என்பது பதவியில் அமர்ந்திருப்பது மட்டும்தான் என்ற எண்ணத்தோடு, ஆட்சி நடத்தும் மக்கள் நலன் மறந்த ஆட்சியாளர்களுக்கு, எனது  கண்டனத்தை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்

மக்கள் வாழ்வு குறித்து கவலை கொள்ளாமல் இருக்கும் இந்த அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran's announcement against EPS about 8 members death in nagapattinam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->