காங்கிரஸ் தலைவர் மாற்றம்! புதிய தலைவரை நியமனம் செய்த ராகுல்! - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலுடன் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் டெல்லி காங்கிரஸ் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 

தேவேந்திர யாதவ், ராஜேஷ் லிலோதியா, ஹாருண் யூசுப் ஆகியோர் செயல் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, ஷீலா தீட்சித் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தலைவர் பதவியை அளித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்னை கவுரவப்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.

மேலும், டெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டதற்கு முன்னாள் தலைவர் அஜய் மக்கான் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியவை, மத்தியில் உள்ள மோடி அரசையும், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசையும் எதிர்த்து திறம்பட செயல்படுவார் என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Congress leader is change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->