தமிழக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. 

இதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது எனவும், சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்'' என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகம் செய்து வந்தது. 

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை தொடங்கிய உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசும், வேதாந்த நிறுவனமும் தங்களின் வாதத்தை முன்வைத்தன. இந்நிலையில், இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது.

அதன்படி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் எனற தமிழக அரசின் அறிவிப்பில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.  

இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது கூறியவை, ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி. ஸ்டெர்லைட் ஆலை தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகினாலும் வழக்கை சந்திப்போம் என்று கூறினார்.

தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்ப்பின் நகல் கிடைத்த பின் ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடையை அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலின், பாலகிருஷ்ணன், வைகோ உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv shanmugam says sterlite judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->