3,650 நாட்களாக என்ன செய்தார் மோடி? - கொந்தளிக்கும் அதிமுக வேட்பாளர்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அதிமுக 4ம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் எனவும், அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பின்னால் செல்வார்கள் எனவும் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அண்ணாமலை இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஜெயக்குமார் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது அண்ணாமலை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் தனது பங்கிற்கு பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "அதிமுகவை அளிப்போம் என அண்ணாமலை சொன்ன பின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் இப்போது வெறிகொண்டு பணி செய்கிறார்கள். கடந்த 3,650 நாட்களாக ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி இது நாள் வரை கோவைக்கு என்ன செய்தார்? 

இப்போது வந்து வாக்குறுதி தருவது ஏன்? விமான நிலையம் விரிவாக்கம் பற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது தலைமைச் செயலாளர் மூலம் மத்திய அரசிடம் பேசியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக எதையும் செய்யாத உங்கள் பிரதமர் இப்போது மட்டும் செய்து விடுவாரா?

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்று கோவைக்கு வந்து வேலை செய்கின்றனர். நீங்கள் தானே அங்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? உத்திர பிரதேசத்திற்கு என்ன செய்தீர்கள்? இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது? " என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore aiadmk candidate ask Narendra Modi what doing lost 3650 days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->