மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் முதல்வர் : வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


கோவா முதலமைச்சர்  மனோகர் பரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முதல்வரின் மேற்சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கோவா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் மனோகர் பரிக்கர் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அண்மையில் இவர் கணைய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனையடுத்து சிகிச்சைக்குப் பிறகு வீடுதிரும்பிய அவருக்கு, மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி மீண்டும் மும்பையிலுள்ள லீலாவதி எனும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தற்போது அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அவருடைய உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை கோவா மாநில சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லாபோ மறுத்துள்ளார். 

இது குறித்து கூறிய அவர், முதல்வர் மனோகர் பரிக்கருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால், உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்தார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என்றும் தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா நாட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம் என்றும் மைக்கேல் லாபோ தெரிவித்தார். 

முதலமைச்சர் பரிக்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நாளை மறுதினம் தாக்கல் செய்யப்பட உள்ள கோவா மாநில பட்ஜெட்டை அம்மாநிலத்தின் அமைச்சர் சுதின் தவாலிகர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm going to america for medical treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->