முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு., எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த ஸ்டாலின் ..! - Seithipunal
Seithipunal


 தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார்.

ஆனால்,தூத்துக்குடியில் 144  தடைசட்டம் விதிக்கப்பட்டிருக்கும்போது, தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உடனேயே வேல்முருகனை போலீசார் கைது செய்து தூத்துக்குடி மண்டபத்தில் வைத்துள்ளனர் .

    

இதையடுத்து, அவரை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் போலீசார் கைது செய்து புழல்சிறையில் அடைந்தனர்.  

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, 'தூத்துக்குடியில் 13பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்ய துப்பில்லாத அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.காவல்துறையை காவி மயமாக்கும் முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு' என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister's resignation is safe for people, Stalin angry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->