ஜூன் 4க்கு பின் அ.தி.மு.க யார் கையில்? பரபரப்பு கிளப்பிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்க மதிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சற்று முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

தேனி பங்களா மேட்டில் நடைபெற்ற இந்த பரப்புரையின் போது அதிமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

அப்போது பேசிய அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தனர். அதே பன்று தற்போது தேனியில் டிடிவி தினகரன் தோற்கடிக்க வேண்டும் என அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்துள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று டிடிவி தினகரன் அரசியல் செய்கிறார். 

2024 தேர்களுக்கு பிறகு உண்மையான தலைவர்கள் கையில் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் இருக்கும். தற்போது காண்ட்ராக்டர்களிடம் அதிமுகவை இபிஎஸ் தாரை பார்த்து விட்டார். அதிமுக வேட்பாளர்கள் அனைவருமே பெரும் காண்ட்ராக்டர்கள். ராமரைப் போல 16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு தினகரன் இந்த தேர்தலில் களம் காண்கிறார். டிடிவி தினகரன் கையில் அதிமுக சென்று இருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்க மாட்டார்" என அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai set ADMK head will be changed after June4


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->