திமுகவின் விலை குறைப்பு வாக்குறுதி என்னாச்சு.? - ரவுண்டு கட்டும் அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பெற்று மற்றும் டீசல் விலையை 2 ரூபாய் குறைப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று இரவு அறிவித்தார். அதன்படி இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் விளைவாகவே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வரையை குறைத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எனது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு டீசல் விலையை 5 ரூபாய் மற்றும் பெட்ரோலிலே 10 ரூபாய் குறைத்தது. அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் விலை 8 ரூபாய் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் குறைத்தது. 

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 2 ரூபாய் குறைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி கடந்த 28 மாதங்களில் மத்திய அரசு பெட்ரோல் விலையை 15 ரூபாயும் டீசல் விலையை 18 ரூபாயும் குறைத்துள்ளது. 

ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை ரூ.5 டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் நிறைவற்ற நிலையில் அதனை நிறைவேற்ற வில்லை. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எப்போது தூக்கத்திலிருந்து எழுந்து இதை நிறைவேற்றுவார் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai ask petrol diesel price reduction in DMK manifesto


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->