முன்னாள் பிரதமருடன் முதலமைச்சர் திடீர் சந்திப்பு.! நிலவும் அரசியல் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார்.
 
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு, பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதன்படி அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். அதுமட்டுமின்றி பல முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
இந்நிலையில், இன்று மாலை சந்திரபாபு நாயுடு முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடாவை சந்தித்தார்.

பத்மநாபா நகரில் இருக்கும் தேவேகவுடா வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அவருடைய மகனும் கர்நாடகா முதலமைச்சருமான குமாரசாமியும் அப்போது உடன் இருந்தார். இதை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தெரிவித்து இருக்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்த கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரே ஒரு பாஜக தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh CM Chandrababu Naidu meet ex pm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->