அதிமுக எம்எல்ஏ கைது - நேரில் சென்ற முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


சேரன்மகாதேவியில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை-அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சேரன்மகாதேவியில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையா உள்பட அதிமுகவினர், பொதுமக்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் அம்பை சாலை விரிவாக்க பணிகளை பல மாதங்களாக கிடப்பில் போட்ட திமுக அரசை கண்டித்து, இன்று அம்பையில் கழக அமைப்பு செயலாளர் இசக்கிசுப்பையா எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக கூறி, அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா உள்பட அதிமுகவினர், பொதுமக்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நேரில் சென்று விசாரித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA Isakki Subbaiya arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->