அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ.! ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க-வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னிச்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவராக இருந்த அய்யப்பன் வீட்டில் நேற்று வருமான வரி துறையினர் சோதனை நடைபெற்றது. அவர் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த வருமான வரிசோதனை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த வருமான வரி துறை சோதனையில் பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.

2006 - 2011ம் ஆண்டில் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் அய்யப்பன். பின் திமுகவில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார்.

இந்நிலையில், அய்யப்பன் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிச்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex mla suspended


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->