#BreakingNews : தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி..! உச்சகட்ட மகிழ்ச்சியில் இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில், ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அறிவிப்பட்டது என்று கூறினார்.

2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் திட்டம் இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டு.

இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்துள்ளாது. ஏழை தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை இல்லை, கருணாநிதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதற்கு முன்னதாக இரைட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கில், அதிமுகவுக்கு இரைட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 money for high court judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->