எடப்பாடி அரசின் ஆயுளை தீர்மானிக்கும் முக்கிய வழக்கின் தீர்ப்பு -தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வரை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். முதல்வருக்கு எதிராக செயல்பட்ட்டதால் கட்சியின் விதிப்படி, அவர்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில் இன்று வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களும் எழுத்துப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம்  இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.வழக்கின் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு ஆதரவாக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் ஆளும் தரப்பு அச்சத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 mlas disqualification case jaudgement is adjouned


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->