உங்களுக்கு ஞாபக மறதி ஜாஸ்தியா? இது உங்களுக்கான டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


சில நபர்களுக்கு தினசரி வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைக்கு காரணமாக அமைவது ஞாபகம் மறதி தான். இந்த ஞாபக மறதியை குறைப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று அலசி ஆராயலாம் வாங்க.

தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம். முக்கியமாக யோகா பயிற்சி மனிதனின் மனநலத்தைப் பாதுகாத்து மன அமைதியை ஏற்பத்தி மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

சமீபத்திய ஆய்வின் படி, கொக்கோ, டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் ஞாபகச்சக்தி மேம்படுகிறது என்று அறியப்பட்டுள்ளது.' குர்குமின்' போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த உணவு பொருட்களை (எடுத்துக்காட்டாக மஞ்சளில் இருக்கிறது) நம் உணவுகளில் சேர்த்துக்கொள்வதால் ஞாபக மறதி வராமல் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவுகளான கேக், குளிர்பானங்கள், சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை குறைப்பதன் மூலம் ஞாபக மறதி வராமல் தடுக்கலாம்.

மைண்ட் கேம்கள் என்று சொல்லப்படும் சுடோகு, குறுக்கெழுத்து புதிர்கள், முதலிய மூளைக்கு வேளைத் தரும் விளையாட்டுகளை விளையாடுவதன்‌ மூலம் ஞாபக மறதியை குறைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to improve memory


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->