உங்கள் கனவுகளில் இவையெல்லாம் வருகின்றதா?! உஷாராக இருங்கள்!! - Seithipunal
Seithipunal


ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான கனவுகள் வரும் . சிலருக்கு சில கனவுகள் விடிந்தாலும், கலைந்தாலும் கலையாமல் அதையே நினைவு படுத்தி கொண்டு பயமுறுத்தி கொண்டிருக்கும் அப்படி பட்ட கனவுகளில் சிலவற்றிற்கு காரணங்கள் இருக்கும். பின்வரும் விதமான கனவுகளை நீங்கள் காண நேர்ந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள்.

உங்களுடைய கனவில் கருமையான பெண், நாய், நரி, ஆண் எருமை, கருப்பு நிறம் கொண்ட விலங்குகள் போன்றவற்றை கண்டால் வீட்டில் துக்கம் மட்டும் பயம் ஏற்ப்படக்கூடும்.

ஓடுவது போலக் கனவு வந்தால் தற்பொழுது தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேறி மாற்று இடத்திற்கு போக வேண்டும் என்று அர்த்தமாம். மிகவும் சிவப்பு நிற அல்ல மிகவும் கருப்பு நிற உடை, நெற்றியில் சிவப்பு நிற சந்தனம் சூடிய பெண் , எள், பன்றி, பூனை ஆகியவற்றை கனவில் கண்டால் அது துக்கம், மரணபயம் என்ற அறிகுறிகள் ஆகும்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவை விழுவது போன்ற காட்சிகளை கண்டால் அது வீட்டுத் தலைமையில் உள்ளவர்களுக்கு ஆபத்தைக் கொடுக்கும் அறிகுறியாகும்.

கடல், தாமரை பொய்கை, மணல் திட்டு, ஆகியவற்றை கனவில் கண்டால் வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போகவோ அல்லது செல்வ நாசம் ஏற்படவோ அறிகுறிகள் ஆகும்.

எண்ணெய் தேய்த்து குளித்தல், பல் விழுதல், முடி உதிர்தல் போன்ற காட்சிகள் கனவில் வந்தால் உடல் நலக்கோளாறு ஏற்படலாம்.

கனவில் மணியோசை கேட்டால் அது துன்பத்திலிருந்து விலக இருக்கின்றோம். மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்யும் அறிகுறியாகும்.

ஒருவரின் கனவில் காவல் நிலையம் செல்வது போல் வந்தால் பணிகளில் கவனம் தேவை. பிச்சை எடுப்பது போல் கனவு வந்தால் தொழிலில் சரிவு ஏற்படபோகும் அறிகுறியாகும். கடிகாரம் வந்தால் தடுமாற்றம் ஏற்படும். மழைத்தூரல் வந்தால் உறவினர்களுடன் சலசலப்பு ஏற்ப்படக்கூடும்.

இது போன்ற கனவுகளை கண்டால் உடனடியாக எழுந்து கை,கால், முகம் கழுவி திருநீறு அணிந்து கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for dream


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->