திருமணமானவர்களுக்கு மட்டும் : தயவு செய்து மற்றவர்கள் தவிர்க்கவும்! - Seithipunal
Seithipunal


என்னதான் தாலி கட்டிய புருஷனாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களை பொண்டாட்டிகிட்ட கேட்கக் கூடாது.அப்படி கேக்குறது 'வேலில போற ஓணானை புடிச்சு வேஷ்ட்டிக்குள்ள விட்ட கதையா' தான் இருக்கும். அதில் ஒருசில கேள்விகளை பார்ப்போம்...,

என்னமா கொஞ்சம் வெயிட்டு போட்டுட்ட போல...?

இந்த கேள்வியை தப்பி தவறி கூட உங்க பொண்டாட்டிகிட்ட  கேட்டுறாதிங்க, அப்பறம் ரொம்ப பீல் பண்ணுவீங்க. 

ஏன்டா இவானா கல்யாணம் பண்ணோம்-னு என்னிக்காவது கவலைபட்டதுண்டா?
    
இந்த கேள்விய எந்த ஜென்மத்திலும் கேட்டுவிட வேண்டாம். அப்புடி ஒருவேளை கேட்டிங்கனா இந்த கேள்வியை கேட்ட கொஞ்ச நாள்ல உங்க மனைவி இதையே பதிலா சொல்லுவாங்க.

நீ எப்பவாவது என்ன ஏமாத்தி இருக்கியா?

இந்த கேள்வியை கேட்பது குடும்பத்துல குண்டு போட்ட மாதிரி. கொஞ்ச நேரத்துல பெரிய பூகம்பமே வந்துரும்.

அந்த விஷயத்தில நான் கில்லியா? உனக்கு ஓகே வா...?

இந்தமாதிரி18+ கேள்வியை கேட்டால் நிச்சயம் உங்கள் மானம் போய்விடும். அவர்கள் விளையாட்டிற்கு கூட வேறு யாருடைய 
பெயரையாவது கூறிவிட வாய்ப்புண்டு.

கோபமா இருக்கியா?

பொண்டாட்டிக்கு புடிக்காத ஒன்றை செய்துவிட்டு, அவர் ருத்ர தாண்டவம் ஆடும்போது,கோவமா இருக்கியா என்று கேட்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல.

உங்க அப்பா, அம்மா வீட்டுக்கு போயே ஆகணுமா? 

இந்த கேள்விய தைரியமா கேட்டுருவீங்கன்னா உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கோங்க. ஆனா ஒன்னு, இந்த கேள்விய அவங்க ரொம்ப தைரியமா, அசால்ட்டா கேட்பாங்க...

எதுக்கு இவ்வளோ மேக்கப்...? 

இந்த கேள்வியை கேட்ட அடுத்த வினாடியே நெருப்பை பத்தவச்ச மாதிரி எரிய ஆரம்பிச்சுருவாங்க. "இல்ல சாதாரணமாவே அழகா தானே இருக்க.. எதுக்கு அழகுக்கு அழகுசாதன பொருட்கள்..." இதுமாதிரி சொல்லி சமாளிச்சுடுங்க.

நான் என் பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வரட்டா?

அதென்னமோ தெரியல, நம்ம பிரண்ட்ஸை கண்டாலே ஏதோ தீவிரவாதி மாதிரி பாக்குறாங்க...
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

only for married people's..please avoid others


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->