பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது : அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


போடோ இனப் பெண்கள் அனைவரும் ஜீன்ஸ் அணியக் கூடாது என்று போடோலேண்ட் டெரிடரி கவுன்சில் ஏரியாவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் அனைத்தும் போடோ மாணவர்கள் கழகதத்தால் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த போஸ்டர்களில் போடோ இனப்பெண்கள் ஜீன்ஸ் அணியாமல், தங்களுடைய பாரம்பரிய உடையான டொகோனாவை அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பல தரப்பினரையும் மிகுந்த அதிர்ச்சியடைய செய்திருப்பது உண்மை. 

உள்ளூர் மக்கள் அனைவரும் இது குறித்து பரவலாக பேசத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் அமைப்பின் தலைவர் பிரமோத் போரா கூறுகையில், பழங்குடியினப்பெண்கள் ஜீன்ஸ் அணிய வேண்டாம் எனத் தடுப்பது என்ன காரணத்திற்காக என்று புரியவில்லை. ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிக்கை கிடையாது என்று கூறியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Posters in the Bodoland Territorial Council area have been poured into the Botan ethnic women not to wear jeans.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->