குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்ஸ் போண்டா!! 10 நிமிடத்தில் எளிமையாக செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


நாம் தினமும் சமைத்த உணவையே மாறி மாறி சமைத்து வந்தால், குழந்தைகளுக்கு உணவின் மீது ஒரு விதமான எரிச்சலை உண்டாக்கும்., அவர்களுக்கு வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் சில வேறுபட்ட சுவையான உணவுகளை சமைத்து வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உணவின் மீது அலாதி பிரியம் ஏற்படும். அந்த வகையில் தற்போது சுவையான நூடுல்ஸ் போண்டா செய்வதை பற்றி காண்போம்.

தேவையான பொருட்கள்: 

மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்,
பச்சை பட்டாணி - கொஞ்சம்,
கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 2 ,
கேரட் -1 ,
பீன்ஸ் - 5 ,
உருளைக்கிழங்கு - கொஞ்சம்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணியில் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும். 

வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடி, பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். 

மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

பஜ்ஜி போண்டா மிக்ஸ்சில், தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு, கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான, நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா ரெடி!! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare veg noodles bonda


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->