இப்படிப்பட்ட ஆண்கள் தான் எங்களுக்கு வேண்டும்!! இளம்பெண்கள் அதிரடி!! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் உள்ள அனைத்து பெண்களும் தனக்கு "வாழ்க்கை துணையாக வரப்போகிறவர் மிகவும் வெளிப்படையாக பேசுபவராக இருக்க வேண்டும்" என நினைக்கின்றனர்.

மேலும், நண்பர்களைப் போல பழக வேண்டும் என விருப்பம் கொள்கின்றனர். அவ்வாறு விருப்பப்படுபவர்கள் 91% உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அது பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

இந்த கருத்துக் கணிப்பு 18 முதல் 25 வயது வரை உள்ள இளம் பெண்களிடம் எடுக்கப்பட்டது அவர்களின் வித்தியாசமான ஆசைகளையும் கனவுகளையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

ஒரு காலத்தில் பெண்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு கூட ஆண்களை சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், நாளாக நாளாக பெண்கள் ஆண்களை சார்ந்து வாழ்வது குறைந்து வருகிறது.

இதனாலேயே பெண்களுக்கு ஆண்கள் மீதான பற்று குறைந்து விட்டது. இப்போதெல்லாம் பெண்கள், ஆண்கள் தங்களை வாழ்நாள் முழுவதும் வைத்து பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் கண்களில் வைத்து தாங்க வேண்டும் என்றெல்லாம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை.

அவ்வாறு எதிர்பார்க்கும் பெண்கள் உண்மையில் 15 சதவீதம் மட்டும்தான். ஆனால், தங்களை இணையாக நடத்த வேண்டும். தங்களுக்கு சுதந்திரம் வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காமல் இருக்க வேண்டும். என அதிக அளவில் பெண்கள் ஆசை கொள்கின்றனர்.

ஒரு கணவன் அனைத்து விதத்திலும் 100% இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் மிக மிகக் குறைவு. குறைந்தது சில மாதங்களாவது ஒரு ஆணுடன் பழகி அவர்களை புரிந்துகொண்ட பிறகுதான், அவர்கள் தங்களுடன் வாழ்வதற்கு தகுதியானவர்களா? என்று புரிந்து கொள்ள முடியும் என்பது பெண்களின் கணிப்பு.

பெற்றோர் மட்டும் பார்த்து இவர் தான் உன் வருங்கால கணவர் என நிர்பந்திப்பதற்கு எந்த பெண்ணும் விருப்பம் கொள்வதில்லை. குறைந்தபட்சம் பெண் பார்க்கும் படலத்தில் அவர்களுடன் ஒரு அரைமணி நேரமாவது பேசிவிட்டு தான் தனது முடிவை வெளிப்படுத்த அவர்கள் எண்ணுகிறார்கள்.

குறிப்பாக பெண்கள் தனது பெற்றோர் மட்டும் முடிவு செய்யும் வரன்களை விரும்புவதில்லை. காரணம் பெற்றோர் வரன்களின் சொத்து, குடும்பம், வேலை, சம்பளம் இவற்றை மட்டுமே பார்க்கின்றனர். இவை, அவர்களுக்கு போதுமானதாக பட்டால் அந்த மாப்பிள்ளைக்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து விடுகின்றனர்.

ஆனால், வரனின் தனிப்பட்ட குணம், அவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அதிகம் ஆராயாமல் விட்டு விடுகின்றனர். மேலும், அவர்களது விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை தெரிந்து கொண்டு அவர் சரிபட்டு வருவாரா? என முடிவு செய்ய பெண்கள் விரும்புகின்றனர்.

18 சதவீதம் பெண்கள் வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். தங்களது தேவைகளை தாங்களே தீர்த்துக் கொள்ள முடியும் ஆண்கள் இல்லை என்றாலும் எங்களால் வாழ முடியும் என்பது போன்று பலர் இருக்கின்றனர்.

திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணால் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழ முடியும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், திருமணத்திற்கு ஆண்கள் சினிமா கதாநாயகன் போல அழகாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை என 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.

மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறினாலும், ஆனால், மது அருந்துவது அவரது உடல்நலம் குறித்தது. அதனால் குறைவாக மது அருந்துபவர்களை ஏற்றுக்கொள்ளலாம் மது அருந்திவிட்டு தொல்லைகள் கொடுக்காமல் இருப்பவர்கள் ஓகே தான்.

ஆனால், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதுதான் தவறு என்றும் கூறுகின்றனர். காலம் மட்டும் மாறுபடவில்லை காலத்திற்கு ஏற்ப பெண்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.

பெண்களிடம் ஏற்பட்டுள்ள இவ்வகையான சிந்தனை மாற்றங்கள் சமூகத்தினால் சரியாக புரிந்து கொள்ளப் படுவதில்லை. இதனாலேயே பலர் நவீன கால பெண்களை எதோ விஷ ஜந்துவை போல நினைக்கின்றனர்.

புரிதலின் அடிப்படையில் அனைத்தும் சரியாக ஏற்று கொள்ளப்படும். ஆனால், அவர்களை பற்றி அரைகுறையாக புரிந்து கொண்டு அவர்களின் ஆடையையும், ஆங்கில பேசியும் மட்டும் வைத்து பல ஆண்கள் நவீன பெண்கள் இப்படி தான் என முடிவு செய்து விடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls like a men for what


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->